பிரான்சில் மிக விரைவாக கொரோனா பரிசோதனை... அதிரடியாக புகுந்து கைது செய்த பொலிஸ்: எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் குறைந்த பணத்தில், கொரோன பரிசோதனை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் கொரோனா ஆய்வுக் கூடம் ஒன்றில், இங்கு மிக விரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால், இது குறித்து பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் கொரோன பரிசோதனை தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்டதாக கூறி மூன்று பேரை கைது செய்தனர்.

மிக விரைவாக கொரோனா பரிசோதனை ஒன்றை மேற்கொள்ள, 15 யூரோக்கள் கட்டணத்தை குறித்த நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் அவர் ஒரு போலியான முகவர் எனவும், அதுபோன்று விரைவாக அவரால் கொரோனா முடிவுகளை பெற்றுக்கொடுக்க முடியாது என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், குறித்த நபர் ஆய்வுகூடம் ஒன்றினது பெயரை பயன்படுத்தியிருந்த நிலையில், அவர்களே இது தொடர்பான புகாரினை பொலிசாரிடம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்