வங்கி கொள்ளை எதிரொலி: சிக்கலில் மாட்டிய நாவலாசிரியர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
வங்கி கொள்ளை எதிரொலி: சிக்கலில் மாட்டிய நாவலாசிரியர்

ஜேர்மனியில் பொருளாதார ரீதியாக போராடி வந்த நாவலாசிரியர் ஒருவர் திடீரென்று வங்கி ஒன்றில் புகுந்து கொள்ளையிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் குற்றவியல் கதைகளை எழுதி வரும் நாவலாசிரியர் 49 வயதான wordsmith. இவரைத்தான் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

நாவலாசிரியரான இவர் தமது கதைகளில் வரும் வங்கி கொள்ளை சம்பவத்தை போலவே திடீரென்று இவரது குடியிருப்பின் அருகே அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் முகமூடி அணிந்து கொண்டு புகுந்துள்ளார்.

அங்கிருந்த வாடிக்கையாளர்களை சத்தமிட்டு மிரட்டி தரையில் படுக்க வைத்திருக்கிறார். மேலும் தாம் வைத்திருந்த துப்பாக்கியை வங்கி ஊழியரை மிரட்டி தமக்கு தேவையான பணம் வேண்டும் என நிர்பந்தித்துள்ளார்.

இதனையடுத்து அந்த வங்கி ஊழியர் கொஞ்சம் பணத்தை எடுத்து இவரிடம் நீட்டியுள்ளார். ஆனால் அந்த பணம் தமக்கு போதாது என கூறிய நாவலாசிரியர் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இறுதியில் 25 நிமிடங்கள் போராடி பெட்டகத்தை திறந்துள்ளனர். அதிலிருந்து 40 ஆயிரம் யூரோ எடுத்துக்கொண்டு கொள்ளையரான நாவலாசிரியர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதனிடையே முகமூடி அணிந்த நபர் ஒருவர் வங்கிக்குள் நுழைவது கண்ட நபர் ஒருவர் சுதாரித்துக்கொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

வங்கியில் இருந்து அந்த நாவலாசிரியர் தப்பிச் செல்லவும், வங்கியின் பாதுகாப்பு நிறுவனத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் ஒரே நேரத்தில் நடந்தது.

இந்நிலையில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் தப்பிக்க முயன்ற நாவலாசிரியரை கைய்யும் களவுமாக பிடிகூடினர்.

இதனையடுத்து 49 வயதான நாவலாசிரியர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள பொலிசார் அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சுவாரசியம் என்னவெனில், wordsmith எழுதியுள்ள கதையில் வங்கி கொள்ளையிட்டு தப்பிய ஹீரோ பல்வேறு உடைகளை மாற்றி பொலிசாரை ஏமாற்றி கடைசி வரை பொலிசில் சிக்கமாட்டார். ஆனால் நாவலாசிரியருக்கு அந்த கலை கைவரவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments