132 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் எழுதி அடைக்கப்பட்டிருந்த கடிதம் சிக்கியது: என்ன எழுதியிருந்தது தெரியுமா?

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய கடிதம் ஒன்று 132 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் பழமையான கடிதம் என்று கூட இதைக் கூறலாம். 19-ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த படகோட்டி பார்க் பவுலா என்பவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதை ஜின் பாட்டிலில் அடைத்து கடலில் மிதக்கவுட்டுள்ளார்.

கடந்த 1886-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் திகதி எழுதப்பட்ட இந்தக் கடிதம் கிட்டத்தட்ட 48 ஆயிரம் நாட்கள் கடலில் பயணித்து வந்த நிலையில், சமீபத்தில் ஆவுஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் தரை ஒதுங்கியுள்ளது.

அப்போது Tonya Illman என்ற பெண் அந்த கடற்கரை வழியே நடந்து சென்ற போது, தற்செயலாக இந்த பாட்டிலைக் கண்டுள்ளார். அந்த பாட்டிலை எடுத்து பார்த்த போது உள்ளே கடிதம் ஒன்று இருப்பதையும் அறிந்துள்ளார்.

அதன் பின் கடிதத்தை வெளியே எடுத்து படித்து பார்த்த போது, அதன் உள்ளே கடலில் ஏற்படும் நீரோட்டங்கள் பற்றியும் கார்டிப்பில் தொடங்கிய எங்கள் பயணம் இந்தோனிசியா வரை தொடர்ந்ததாக குறிப்பிட்டு ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

இதற்கு முன்னர் 108-ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் ஒன்று பாட்டிலின் உள்ளே இருந்ததே பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது 132 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதபட்ட கடிதம் சிக்கியுள்ளது வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers