900 சிறுமிகளை கர்ப்பமாக்கிய நாசிக்கள்: பதறவைக்கும் ஜேர்மானிய வரலாறு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
540Shares
540Shares
lankasrimarket.com

1936 ஆம் ஆண்டு, 10 முதல் 18 வயதுள்ள பிள்ளைகள் நல்ல குணங்களையும் பரஸ்பர நம்பிக்கையையும் நட்பையும் கற்றுக்கொள்வதற்காக Hitler Youth மற்றும் League of German Girls என்னும் அமைப்புகளில் சேருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

என்றாலும் இரு பாலினத்தவரும் இணைந்து பங்குபெற்ற நிகழ்வுகள் ஏராளமான கர்ப்பங்களுக்கும் அதன் விளைவாக மருத்துவர்களால் கட்டாயக் கருச்சிதைவுகளுக்கும் வழி வகுத்தன.

15 முதல் 18 வயது வரையுள்ள சிறுமிகளில் 900 பேர் கர்ப்பமுற்றார்கள், கருச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டார்கள்.

போதுமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் பல பதின்ம வயது சிறுமிகள் பாலியல் வன் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இதனால் League of German Girls என்னும் அமைப்பு League of German Mattresses என்று கிண்டலாக அழைக்கப்பட்டது.

இந்த அமைப்புகளில் சேருவது கட்டாயம் என்பதால் சேர மறுத்தவர்கள் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்கள் அல்லது சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.

முதல் உலகப்போரின் விளைவுகளால் பயங்கர வறுமையையும் வேலை வாய்ப்பின்மையையும் சந்தித்த ஜேர்மனிக்கு Hitler Youth மற்றும் League of German Girls என்னும் அமைப்புகளில் சேருவதால் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் உண்மையில் இரண்டு அமைப்புகளுமே ஹிட்லரின் போர் வீரர்களாகத்தான் பயன்படுத்தப்பட்டன.

சிறுவர் சிறுமியரும் மற்ற போர் வீரர்களைப் போலவே குருட்டுத்தனமாக யோசிக்காமல் ஹிட்லருக்கு கீழ்ப்படிய பயிற்றுவிக்கப்பட்டனர்.

இவ்வளவு காலமாக வெளியே வராத இந்த உண்மைகள் தற்போது Nazi Documentation Centre என்னும் அமைப்பு நடத்திய ஒரு பொருட்காட்சியின் விளைவாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளன.

அடுத்த மாதம் ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த பொருட்காட்சி தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்