விவாகரத்து செய்த மருத்துவரை பணி நீக்கம் செய்த மருத்துவமனை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
241Shares
241Shares
lankasrimarket.com

ஜேர்மனில் கத்தோலிக்க சபை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Düsseldorf இல் அமைந்துள்ள Catholic St. Vinzenz மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் 2008 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது செய்துகொண்டார்.

கத்தோலிக்க முறைப்படி விவாகரத்து என்பது மதரீதியான பண்பாட்டை மீறுவதாகும். ஒரு கத்தோலிக்க சபை தொடர்பான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் மருத்துவர் இவ்வாறு செய்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவரை பணியில் இருந்து 2009 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அந்நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையில், நான் கத்தோலிக்கர் கிடையாது, அப்படியிருக்கையில் என்னை பணியில் இருந்து நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் லேபர் நீதிமன்றம் இந்த முடிவானது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு உடன்பட்டதாக இருந்ததா இல்லையா என்பதைப் பரிசீலிக்குமாறு ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்