200 பேரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய அகதி: நீதிமன்றம் விதித்த தண்டனை

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் நிலையற்ற வெடிகுண்டினை பயன்படுத்தி 200 பேரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிக்கு நீதிமன்றம் 6 வருடம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியின் தனியுரிமை விதிமுறைகளுக்கு இணங்க, ஏமன் அடையாள அட்டையை வைத்திருந்த 20 வயது இளைஞர் கடந்த ஆண்டு ஸ்க்வீரின் வடக்கு நகரில் கைது செய்யப்பட்டார்.

அவருடைய கையில் 200 பேரை கொலை செய்யும் அளவுக்கு நிலையற்ற ஒரு வெடிகுண்டினை தயாரிப்பதற்கான சாதன பொருட்கள் இருந்தன.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த ஹம்பர்க் உயர் நீதிமன்றம், குற்றவாளி பற்றிய தகவல்களை கேட்டறிந்து. அதில், குற்றம் சுமத்தப்பட்டவர் 2015ம் ஆண்டு சிரியாவில் இருந்து வெளியேறி அகதியாக 2016ம் ஆண்டு ஜேர்மனி வந்தடைந்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் தனது சொந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஸ்க்வெரின் பகுதியில் மற்ற இளம் அகதிகளுடன் தன்னுடைய இருப்பிடத்தை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு, வெடிகுண்டு செய்வதற்கான முறைகள் பற்றி தெரிந்துகொண்டுள்ளார்.

அவர் தேடிய வெடிகுண்டு, முன்னதாக 2015-ல் பாரிஸ் நகரிலும், 2016-ல் பிரஸ்ஸல்ஸ் நகரிலும், 2017-ல் மான்செஸ்டர் நகரிலும் பயன்படுத்தப்பட்டவை என கூறி, குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் 5 மாதம் சிறைத்தண்டனாய் விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் இதனை கேட்டு கோபமடைந்த நீதிபதி, குற்றவாளியை கடிந்துகொண்டதோடு 6 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்