ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்: மீண்டும் ஜேர்மனியில் கொடிகட்டிப் பறக்க தயார்

Report Print Givitharan Givitharan in ஜேர்மனி

ஆப்பிள் நிறுவனம் மீது Qualcomm நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்ததை அடுத்து சில நாடுகளில் ஆப்பிள் கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நாடுகளில் ஜேர்மனியே முதன் முதலாக ஆப்பிளின் சில ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையை தடை செய்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் iPhone 7 மற்றும் iPhone 8 ஆகிய கைப்பேசிகளை விற்பதற்கு ஆப்பிள் நிறுவனம் தயாராகியுள்ளது.

ஜேர்மன் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மேற்கண்ட கைப்பேசிகளை விற்பனை செய்வதை நிறுத்தியிருந்தது.

இதன் பின்னரே ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் நீதிமன்றத்தை நாடாது மீண்டும் ஆப்பிள் நிறுவனம் கைப்பேசி விற்பனையில் ஈடுபடுகின்றது.

இதுவேளை இரு நிறுவனங்களும் சமரசத்திற்கு வந்துள்ளனவா? என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers