74 ஆண்டுகளுக்கு பின்னும் போரின் தாக்கத்தை அனுபவிக்கும் ஜேர்மனி, சிதறிய ஜன்னல்கள்: பின்னணி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இரண்டாம் உலகப்போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் அதன் தாக்கத்தை அனுபவித்து வருகிறது ஜேர்மனி.

அவ்வப்போது கண்டு பிடிக்கப்படும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்னும் மக்களின் அன்றாட வாழ்வில் இடைஞ்சல் ஏற்படுகிறது.

Regensburg நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டு ஒன்று, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்யப்பட்ட பின்னரும் கட்டிடங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குண்டை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்வதற்காக அப்பகுதியில் வசித்த சுமார் 4,500 பேர் தங்கள் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டார்கள்.

Regensburg நகரின் செய்தி தொடர்பாளர் ஒருவர், 550 பவுண்டுகள் எடையுள்ள அந்த குண்டு பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டபோதும் அதைச் சுற்றிலும் இருந்த பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கியதாக தெரிவித்தார்.

வெளியாகியுள்ள புகைப்படங்களிலும் இதைக் காணலாம். அந்த வெடிகுண்டு மிகவும் சென்சிட்டிவ் ஆனது என்றும் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் அபாயம் உடையது என்பதாலேயே அதை செயலிழக்கச் செய்யாமல், பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் வெடி குண்டு நிபுணர்கள் தெரிவித்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஆயிரக்கணக்கான வெடிக்காத வெடி குண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்