புகலிட கோரிக்கையாளர்கள் மீது ஜேர்மானியர்களுக்கு அதிகரித்து வரும் வெறுப்பு: ஆய்வு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர்களில் பாதிபேருக்கும் மேல் புகலிடக்கோரிக்கையாளர்களை எதிர்மறையாக பார்ப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஜேர்மனிக்குள் வருவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ள போதிலும், நாட்டுக்குள் புதிதாக வருபவர்களை இன்னமும் எதிர்மறையான எண்ணத்துடனேயே பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

Friedrich Ebert Foundation என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவுகள், வலது சாரிக் கருத்துகள் சாதாரணமானவை என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுவதாக தெரிவித்துள்ளன.

அந்த ஆய்வில், ஜேர்மானியர்களில் 54.1 சதவிகிதத்தினர் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது எதிர்மறையான எண்ணம் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

2014இல் அகதிகள் பிரச்சினை ஏற்பட்ட போது இருந்ததைவிட, இப்போது அதிகம்பேர் (44%) புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது எதிர்மறையான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். 2016இல், அதாவது புலம்பெயர்தல் உச்சத்தை அடைந்ததற்கு பிறகு, 49.5 சதவிகிதத்தினர் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது எதிர்மறையான எண்ணம் கொண்டிருந்ததாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இத்தகைய எண்ணம் முன்பு கிழக்கு ஜேர்மனியாக இருந்த பகுதிகளில் அதிகம் சாதாரணமாக இருந்ததாக (63%)தெரிவிக்கின்றன. மேற்கு ஜேர்மனியில் இந்த எண்ணிக்கை 51 சதவிகிதமாக உள்ளது.

அந்த ஆய்வு, தற்போது ஜேர்மனிக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ள நிலையிலும் அவர்கள் மீதான தப்பெண்ணம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, 2018 செப்டம்பருக்கும் 2019 பிப்ரவரிக்கும் இடையில் ஜேர்மானியர்களிடம் 1,890 பேரிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஐந்து ஜேர்மானியர்களில் ஒருவர் (19%) பொதுவாக அயல் நாட்டவர்கள் மீது எதிர்றை எண்ணம் கொண்டிருக்கின்றார்.

இதே எண்ணம் இஸ்லாமியர்கள் மீதும், அதைவிட அதிகம் சிந்தி மற்றும் ரோமா குழுக்கள் மீதும் (26%)காணப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்