ஜேர்மனியின் பல நகரங்களில் வழக்கத்தை விட அதிகரித்த வெப்பநிலை!

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் தலைநகர் பெர்லின் உட்பட பல்வேறு நகரங்களில், வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜேர்மனியிலும் இதே நிலை தொடர்கிறது. குறிப்பாக, தலைநகர் பெர்லின் உட்பட ஜேர்மனியின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

அதாவது, இந்த நகரங்களில் எல்லாம் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. பெர்லினில் வெப்பத்தை தணித்துக்கொள்ள மக்கள் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.

பழங்களின் மேல் வைக்கப்பட்ட ஐஸ்கிரீம்கள் வெப்பத்தால் உருகி புரூட்சாலட்டாக மாறுகின்றன. அதனை மக்கள் விரும்பி உண்கின்றனர்.

இதற்கிடையில், பிராங்பர்ட் நகரில் சுமார் 3 ஆயிரம் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள், வெப்பநிலையை பொருட்படுத்தாமல் ஐயர்ன் மேன் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்