உலகின் முதல் கவர்ச்சி கவிதை: ஒரு துண்டு காகிதம் வெளிப்படுத்தியுள்ள வரலாற்று உண்மை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் ஜேர்மனியில் கிடைத்த ஒரு கவிதைத் துண்டு, முன்னர் அது எழுதப்பட்டதாக கருதப்படும் காலகட்டத்தைவிட, 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது.

உலகின் முதல் கவர்ச்சிக் கவிதை என கருதப்படும் அந்த கவிதை, ஒரு பெண்ணும் அவரது உடலும் வாக்குவாதம் செய்யும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.

மத்திய காலகட்ட வரலாறு மற்றும் கலை தொடர்பான ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களை இந்த கண்டுபிடிப்பு பெருமகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஏனென்றால், அது கி.பி. 1300 வாக்கில் எழுதப்பட்டது என்பதை இந்த கண்டுபிடிப்பு உறுதி செய்துள்ளது.

இந்த துண்டுக்காகிதம் கிடைக்கும் வரையில் மத்திய காலகட்டம் முடியும் வரை இந்த கவிதை எழுதப்படவில்லை என்றே கருதப்பட்டு வந்தது.

ரோஜா முள், The Rose Thorn (Der Rosendorn) என்னும் அந்த கவிதையில் ஒரு அழகிய பெண்ணும் அவளது பெண்ணுறுப்பும் தங்களுக்குள் யார் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுப்பவர் என வாதிடுகிறார்கள்.

தனது அழகுதான் மனிதர்களைக் கவர்வதாக அந்த பெண் வாதிட, இல்லை தான்தான், அதாவது பாலியல் மகிழ்ச்சிதான் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாக வாதிடுகிறது அவளது உடல்.

கடைசியாக இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள், அதாவது இருவரும் இணைந்து, அதாவது அழகும், பாலியல் இன்பமும் இணைந்துதான் மனிதனை மகிழ்விப்பதாகவும், இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் தங்கள் வாதத்தை முடிக்கிறார்கள் என்பதாக முடிகிறது அந்த கவிதை.

அந்த கவிதையை எழுதியவர் யார் என்பதோ, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பதோ கண்டுபிடிக்கப்படவில்லை.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த கவிதை அடங்கிய காகிதத்துண்டு, 22 சென்றிமீற்றர் நீளமும், 1.5 சென்றிமீற்றர் அகலமும் கொண்டதாக உள்ளது. அது ஜேர்மனியிலுள்ள Siegen பல்கலைக்கழகத்தின் Nathanael Busch என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்