அதிகளவு சர்க்கரையை உண்ணும் ஜேர்மனிய குழந்தைகள்..! வெளியான தகவல்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் பரிந்துரைக்கப்பட்ட அளவு சர்க்கரையை விட அதிக அளவு சர்க்கரையை குழந்தைகள் உட்கொண்டிருப்பதாக நுகர்வோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் ஜேர்மனியின் நீரிழிவு சங்கம், ஊட்டச்சத்து சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, ஜேர்மனியில் ஓர் ஆண்டில் குழந்தைகள் சர்க்கரையை உணவுகளின் வழியாக எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பது குறித்து கணக்கிடப்பட்டு, நுகர்வோர் ஆலோசனை அமைப்பானது ஆகஸ்ட் 12ஆம் திகதி ‘சர்க்கரை மேல்பாய்வு தினம்’ (Sugar Overshoot Day) என்று பெயரிட்டது.

மேலும், வயது வந்த ஆண்கள் செப்டம்பர் 20ஆம் திகதி உச்சபட்ச சர்க்கரையை உட்கொள்ளும் தினமாகவும், வயது வந்த பெண்கள் அக்டோபர் 8ஆம் திகதி உச்சபட்ச சர்க்கரை அளவை அடைவதாகவும் Foodwatch என்ற சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று ஜேர்மனியில் உள்ள குழந்தைகள் அதிக அளவு சர்க்கரை உணவுகளை உண்பதாகவும், மேலும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆண்டு அளவை விரைவாக மீறிவிட்டதாக தெரிவித்துள்ளது.

அத்துடன் சர்க்கரை நிரம்பிய உணவுகளை குழந்தைகளுக்காக பல நிறுவனங்கள் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்த பிரச்சனையை நிலைநிறுத்துவதற்கு உணவுத் துறையினர் அதிகம் குற்றம்சாட்டுவதாகவும், ஜேர்மன் அரசு இதற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Foodwatch அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக Foodwatch நிபுணர் Oliver Huizinga கூறுகையில், ‘குழந்தைகள் இனிப்பு சாப்பிடுவது ஒரு பிரச்னையல்ல. பிரச்னை என்னவென்றால், உணவுத்தொழில் ஏறக்குறைய, பிரத்யேகமாக இனிப்புகள், அதிகப்படியான சர்க்கரை பானங்கள் மற்றும் பிற குப்பை உணவை குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் சந்தைப்படுத்தப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்