நேரலையில் ஒளிபரப்பான ஜேர்மன் தேவாலய துப்பாக்கிச் சூடு!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் புதன்கிழமையன்று நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனிய நகரமான ஹாலேயில் புதன்கிழமையன்று யூத தேவாலயம் மற்றும் கபாப் கடை மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆனால் மேலும் இருவர் கடத்தப்பட்ட காரில் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவமானது நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தப்பி சென்ற நபர்களை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Reuters

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டின் காட்சிகள் அமேசானின் வீடியோ கேமிங் தளமான ட்விட்சில் நேரலை செய்யப்பட்டதாக அதன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த தளம் 15 மில்லியன் தினசரி பயனர்களைக் கொண்டுள்ளது என்று கூறும் ட்விச், முதன்மையாக விளையாட்டாளர்கள் தங்கள் விளையாட்டுகளை லைவ் ஸ்ட்ரீம் மற்றும் பிற பயனர்களுடன் அரட்டையடிக்க பயன்படுத்தப்படுகிறது. அதோடு விளையாட்டு, இசை மற்றும் அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சேனல்களும் இதில் உள்ளதாக கூறுகிறது.

இதுக்குறித்து ட்விச் செய்தித் தொடர்பாளர் பிரையல் வில்லாபிளாங்கா கூறுகையில், "இன்று ஜேர்மனியில் நிகழ்ந்த சோகத்தால் நாங்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்