ஜேர்மன் இளைஞரின் விபரீத ஆசை... பல இளம்பெண்கள் பாதிப்பு: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியின் பவேரியா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தமது விபரீத ஆசைக்கு சிறார் உள்ளிட்ட இளம் பெண்களை பயன்படுத்திக் கொண்ட விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

பவேரியா பகுதியை சேர்ந்த 30 வயது டேவிட் என்பவரே சிறார் மற்றும் இளம்பெண்களை துன்புறுத்தி ஸ்கைப் வழியாக ரசித்து வந்துள்ளார்.

தாம் ஒரு விஞ்ஞானி என அறிமுகம் செய்துகொண்டுள்ள இவர், தமது வலையில் சிக்குபவர்களை, தங்கள் கால் பாதத்தில் 230v மின்சாரத்தை கடத்த ஊக்குவித்துள்ளார்.

அதை தமது அறையில் இருந்து ரசித்து வந்துள்ளார். இவரது வலையில் 13 வயது முதலான பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவரது விபரீத ஆசைக்கு உடன்படுபவர்களுக்கு இவர் 3,000 யூரோ வரை வழங்கப்படும் என ஆசைகாட்டியுள்ளார்.

தற்போது மூனிச் நீதிமன்ற விசாரணையில் சிக்கியுள்ள இவர் மீது 88 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவரது விபரீத ஆசைக்கு சிக்கியுள்ள பலரும் பலமுறை இதை இவருக்காக முயற்சி செய்துள்ளனர்.

இதனால் பலரும் தீக்காயங்கலுக்கு இரையாகியுள்ளனர். பலருக்கும் சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு இருதயம் தொடர்பான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. சுயநினைவை இழந்ததாகவும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

230v மின்சாரம் என்பது தனி ஒருவரை கொல்ல போதுமானது என குற்றம்சாட்டப்பட்டுள்ள டேவிட்டுக்கு தெரியும் என கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பில் 27 வயது பெண்மணி ஒருவருடன் டேவிட் உரையாடும் காட்சிகளும், கால்பாதங்களில் மின்சாரம் பாச்சுவதும் தொடர்பில் பதிவான வீடியோவை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 2018 பிப்ரவரி மாதம் கைதாகியுள்ள டேவிட் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளார். மேலும், டேவிட்டின் விபரீத ஆசையானது பாலியல் தொடர்பானது என கூறும் நீதிபதி, இனிமேல் நடைபெறும் விசாரணைக்கு பொதுமக்களை அனுமதிப்பதில்லை என அறிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்