கொன்று எரிக்கப்பட்ட 11 வயது சிறுமி.. 23 வருடங்களாக நீடிக்கும் மர்மம்: 900 ஆண்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் 23 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கை தீர்க்கும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மீது டி.என்.ஏ சோதனைகளைத் தொடங்கியுள்ளனர் பொலிசார்.

1996 ஆம் ஆண்டுமேற்கு ஜேர்மனிய நகரமான கிரெவன்பிராய்சில் 11 வயதான சிறுமி கிளாடியா ரூஃப், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்கு தற்போது வரை யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை.

கிரெவன்பிராய்சில் பக்கத்து வீட்டு நாய் உடன் நடந்து செல்லும் போது கிளாடியா ரூஃப் 1996 மே மாதம் கடத்தப்பட்டார். அவரது உடல் இரண்டு நாட்களுக்கு பின்னர் கழுத்தை நெரித்து, பெட்ரோலில் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது, சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகளை பொருத்தும் முயற்சியில் குறைந்தது 900 ஆண்களுக்கு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல் நாள் சோதனை சனிக்கிழமை 10:00 மணிக்கு தொடங்கியது. சோதனைக்கு ஒப்புக்கொண்டவர்கள் மாதிரிகள் சேகரிகக்ப்படும் உள்ளூர் ஆரம்ப பள்ளியில் தங்களது உமிழ்நீரை அளித்துள்ளனர்.

23 வருடங்களுக்கும் மேலாக தொடரும் என் மகளின் வழக்கை தீர்க்க தற்போது பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, குற்றவாளி நம் அனைவருக்கும் பின்னால் நீண்ட காலமாக மறைந்திருக்க முடிந்தது என்று கிளாடியாவின் தந்தை ப்ரீட்ஹெல்ம் ரூஃப் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

bbc

இந்த வழக்கின் முதன்மை புலனாய்வாளரான ரெய்ன்ஹோல்ட் ஜோர்டான் கூறியதாவது, சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ பகுப்பாய்வு செய்ய நான்கு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என்று கூறினார்.

2010ல் 350 உள்ளுர் டி.என்.ஏ மாதிரிகளை பொலிசார் பரிசோதித்தனர், ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்