பெர்லின் இரவு விடுதியில் 16 பேருக்கு கொரோனாவை பரப்பிய நபர்: பீதியில் ஜேர்மன் மக்கள்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லின் இரவு விடுதியில், ஒருவர் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜேர்மனியில் கொரோனா குறித்த பீதி பரவி வருகிறது.

பெர்லினிலுள்ள Trompete என்ற இரவு விடுதியில் ஒருவரிடமிருந்து 16 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மொத்தத்தில் பெர்லினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்காகும்.

ஆகவே, கொரோனா பீதி ஜேர்மனி முழுவதும் பரவிவரும் நிலையில், இசை, நடன நிகழ்ச்சிகள், விடுதிகள், கால்பந்தாட்டப் போட்டிகள் ஆகியவற்றை தவிர்க்குமாறு ஜேர்மன் சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஜேர்மனியைப் பொருத்தவரையில் 1,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்களன்று Essenஐச் சேர்ந்த ஒரு 89 வயது பெண்ணும், Heinsbergஐச் சேர்ந்த ஒரு 78 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவுவதை தவிர்க்க, மக்கள் முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யவும், பேருந்து ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிகளை மூடுவதற்கு ஜேர்மனி மறுப்பு தெரிவித்துள்ளது.

காரணம், அப்படி செய்வதால் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் வீட்டிலேயே உட்கார்ந்துவிடுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சரும் அலுவலர்களும் கருதுவதுதான்.

ஜூன் மற்றும் ஆகத்து மாதங்களுக்கிடையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர் ஒருவர், ஆகவே, மக்கள் கூடுகைகளை தவிர்ப்பதும், தொற்று எளிதில் பரவும் அபாயமுள்ள முதியவர்களை தனிமைப்படுத்துதலும் அவசியம் என்று தெரிவித்துள்ளதோடு, இல்லையென்றால், ஜேர்மனியில் இறப்பு வீதம் 20 முதல் 25 சதவிகிதத்தை எட்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...