உளவு பார்த்ததாக இந்தியர் மீது ஜேர்மனி குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலுள்ள சீக்கிய சமுதாயத்தினர் மற்றும் காஷ்மீரி சமூக ஆர்வலர்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உளவு பார்த்ததாக இந்தியர் ஒருவர் மீது ஜேர்மன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பிட்ட நபரின் பெயர் Balvir S என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வாழும் உளவுத்துறை ஊழியர் ஒருவருடன் அவர் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பிலிருந்ததாகவும், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் பல முறை அவருக்கு தகவல் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் தற்போது சிறையிலிருக்கிறாரா என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்த விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தொடங்க இருக்கிறது.

ஏற்கனவே, இதே பிராங்பர்ட் நீதிமன்றம், ஜேர்மனியின் சீக்கிய சமுதாயம் மற்றும் காஷ்மீரி இயக்கம் குறித்து உளவு பார்த்ததாக ஒரு இந்திய தம்பதியினர் மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்