சில வி.ஐ.பிகளுக்காக போக்குவரத்தையே நிறுத்திய பொலிசார்: ஒரு சுவாரஸ்ய வீடியோ!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் சில வி.ஐ.பிகள் சாலையைக் கடப்பதற்காக பொலிஸ் காரை சாலைக்கு குறுக்கே நிறுத்தி பொலிசார் போக்குவரத்தை நிறுத்தினர்.

அந்த வி.ஐ.பிகள் மனிதர்கள் அல்ல, காட்டுப்பன்றிகள்! பெர்லினில் சுமார் 3,000 காட்டுப்பன்றிகள் வசிக்கின்றனவாம்.

எந்த அளவுக்கு காட்டுப்பன்றிகள் பிரச்சினை இருக்கிறதென்றால், அவைகளை கட்டுப்படுத்துவதற்காக தனியாக ஒரு கூட்டம் அலுவலர்களை அரசு பணிக்கமர்த்தியுள்ளதாம்.

ஆனால், பெர்லின் மக்கள் அவற்றை அட்ஜஸ்ட் செய்து வாழ பழகிவிட்டார்கள். இப்படி பல இடங்களில் பன்றிகள் சாலையைக் கடப்பதுண்டாம்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், ஒரு கூட்டம் காட்டுப்பன்றிகள் சாலையைக் கடப்பதற்காக, பொலிசார் தங்கள் வாகனத்தைக் குறுக்கே நிறுத்தி பன்றிகள் சாலையைக் கடக்க உதவுவதைக் காணமுடிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்