எதிர்வரும் மாதங்களில் என்ன நடக்கும்? நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Basu in ஜேர்மனி

குளிர்காலம் நெருங்கி வருவதால், எதிர்வரும் மாதங்களில் கொரோனா வைரஸ் நிலைமை மிகவும் சவாலாகும் என்று ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரித்துள்ளார்.

அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும் நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பயணம் செய்வதை நிறுத்துமாறு ஜேர்மன் அதிகாரிகள் குடிமக்களை வலியுறுத்தியதை தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கல் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சில விஷயங்கள் கோடையில் இருந்தததை விட அடுத்த சில மாதங்களில் மிகவும் கடினமாகிவிடும்.

கோடையில் காற்று வழியாக பரவுவதாக கருதப்படும் வைரஸின் நுண்ணிய துகள்களால் பாதிக்கப்படாத வகையில் நாம் அனைவரும் பாதுகாப்பாக மற்றும் சுதந்திரமாக இருந்தோம்.

குளிர்காலத்தில் இந்த நிலைமை மிகவும் சவாலாகிவிடும், சமூக இடைவெளி தொடர்பான வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு ஜேர்மனியர்களிடம் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தினார்.

பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியிலும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன, இருப்பினும் ஸ்பெயின் அல்லது பிரான்ஸைப் போல மோசமாக பாதிக்கப்படவில்லை.

அதேசமயம் ஜேர்மனியில் முக்கிய நிகழ்வுகளுக்கான தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 50 யூரோ அபராதம் விதிக்க ஜேர்மனி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்