ஜேர்மனியில் கொரோனா தட்டுப்பாடுகளுக்கு எதிர்த்து போராட்டம்! எதிர்க்கும் வாசகங்களுடன் அணி திரண்ட மக்கள்

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடையை மீறியும் போராட்டம் நடைபெற்றது.

ஜேர்மனியில் கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தவிருப்பதாக சில அமைப்புகள் அறிவித்திருந்தன.

குறிப்பாக, இந்தப் போராட்டத்தில் ஜேர்மனியின் முக்கிய வலதுசாரி அமைப்புகள் பங்கேற்கவிருப்பதாக கூறியுள்ளன.

ஆனால், இத்தகைய போராட்டங்களுக்கு ஜேர்மனி அரசு தடை விதித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுவா்கள் மீது, கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற போராட்டக் குழுவினா், அதற்கான அனுமதியைப் பெற்றனா். அதன் பின், திட்டமிட்டபடி பொ்லினில் போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா, ரஷியா, நாஜிக்கள் காலத்து ஜேர்மனி ஆகியவற்றின் கொடிகளை ஏந்தி ஏராளமானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜேர்மனியில் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் விதிமுறைகளை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய மேலங்கிகளை பலா் அணிந்து வந்திருந்தனா்.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி, ஜேர்மனியில் 2,42,328 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 9,361 போ் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா். இதுவரை 2,17,061 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்