எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள்: ஜேர்மன் தூதரை அழைத்து மிரட்டிய ஹொங்ஹொங்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
234Shares

ஜேர்மன் தூதரை அழைத்து எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என ஹொங்ஹொங் அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

ஜேர்மனி சமீபத்தில் ஹொங்ஹொங்கில் அரசை எதிர்த்து போராடும் போராட்டக்காரர்களில் ஒருவரான 22 வயது மாணவி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தது. இந்த விடயம் ஹொங்ஹொங்கை எரிச்சலடையச் செய்துள்ளது.

அந்த மாணவி கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்த நிலையில், ஜேர்மனிக்கு தப்பியோடினார்.

அவருக்கு ஜேர்மனி மூன்றாண்டுகளுக்கு அகதி நிலை அளித்துள்ளது. ஆகவே, ஜேர்மன் தூதரான Dieter Lamléஐ அவசரமாக அழைத்த ஹொங்ஹொங் முதன்மைச் செயலரான Matthew Cheung மற்றும் பாதுகாப்புச் செயலரான John Lee ஆகியோர், ஜேர்மனிக்கு தங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மற்ற நாடுகள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை ஹொங்ஹொங் அரசு கடுமையாக எதிர்க்கிறது என்றும், அப்படிச் செய்வது, குற்றத்திற்கு தண்டனை கிடைக்காது என்ற தவறான எண்ணத்தை குற்றவாளிகளுக்கு கொடுத்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்று கூறிய Cheung, சட்டங்களை மீறுவோர் நியாயப்படி விசாரிக்கப்படுவார்கள் என்றார்.

ஆனால், நியாயப்படி தான் விசாரிக்கப்படமாட்டேன் என்று அஞ்சிதான் அந்த மாணவி ஜேர்மனிக்கு தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்