கொரோனா பிரச்சினையே முடியவில்லை... அதற்குள் ஜேர்மனி உட்பட பல நாடுகளில் பரவும் மற்றொரு நோய்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கொரோனா இன்னமும் குறைந்தபாடில்லை, அதற்குள் ஜேர்மனி உட்பட பல நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவில் ஏற்கனவே இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவத்தொடங்கியுள்ளதையடுத்து ஏராளம் கோழிகள் கொல்லப்பட்டன.

நெதர்லாந்து அதிகாரிகள் இரண்டு பண்ணைகளில் பரவத்தொடங்கியுள்ள பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

நெதர்லாந்தில் பரவும் அதே H5N8 என்னும் நோய்க்கிருமி, வடக்கு ஜேர்மனியில் கோழிகள் மற்றும் வனப்பறவைகளையும் தாக்கியுள்ளது.

ஜேர்மனியின் Nordfriesland என்னும் மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

EPA

H5N8 பெருமளவில் மனிதர்களை பாதிப்பதில்லை என்றாலும், பொருளாதார ரீதியாக அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும்.நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த கோழிகளைத் தொடவேண்டாம் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள், ஆனால் கோழிக்கறியோ, முட்டையோ சாப்பிடுவது பாதுகாப்பானதுதான் என்றும், அவற்றை முழுமையாக வேகவைத்து சாப்பிடும்போது, வைரஸ் கொல்லப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்கள்.

ஜேர்மனியில், Nordfriesland பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட பறவைகள், காட்டு வாத்துகள் மற்றும் நாட்டு வாத்துகள் இறந்து கிடந்ததாகவும், அவை பறவைக்காய்ச்சலால்தான் இறந்திருக்கும் என நம்பப்படுவதாகவும் ஜேர்மன் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

2016 - 2017 காலகட்டத்தில், ஜேர்மனியில் பறவைக்காய்ச்சல் பரவியதால், 900,000க்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்