ஜேர்மனியில் தடுப்பூசி போட்டு நான்கு நாட்களுக்குள் 10 பேர் பலி... விசாரணைக்கு உத்தரவு

Report Print Balamanuvelan in ஜேர்மனி
777Shares

ஜேர்மனியில், பைசர் தடுப்பூசி போட்டு நான்கு நாட்களுக்குள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் ஆங்காங்கு பைசர் தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்பட்டுவருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், பைசர் தடுப்பூசியை இணைந்து தயாரித்த ஜேர்மனியிலேயே 10 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் பலியாகியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டு பல மணி நேரம் முதல் நான்கு நாட்கள் வரையிலான காலகட்டத்திற்குள், 79 முதல் 93 வயது வரையுள்ள 10 பேர் பலியாகியுள்ளார்கள்.

ஆகவே, ஜேர்மனியின் Paul Ehrlich நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்