அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்காக வருந்துகிறேன்...ஏஞ்சலா மெர்க்கலை மோசமான வார்த்தையால் விமர்சித்த அரசியல்வாதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares

பொதுமுடக்கம் அறிவித்துவிட்டு அதை விலக்கிக்கொண்டுள்ள ஜேர்மன் சேன்ஸலர் மீது கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சலா மெர்க்கலுக்கு முன் ஜேர்மன் சேன்ஸலராக இருந்த Gerhard Schroeder என்பவரின் ஊடகச் செயலரான Bela Anda என்பவர், ஏஞ்சலா ஈஸ்டர் காலகட்டத்திற்கான பொதுமுடக்கத்தை அறிவித்துவிட்டு, பின்னர் அதிலிருந்து பின்வாங்கியதற்காக அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆறு மாதங்களில் அடுத்த சேன்ஸலர் தேர்தல் ஜேர்மனியில் நடக்க இருக்கும் நிலையில், நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்புகள் ஏஞ்சலாவின் கட்சி கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஏஞ்சலாவின் பலம் அவமானத்துக்குரிய வகையில் குறைந்துகொண்டே வருவதாக விமர்சித்துள்ளார் Bela.

முதலில் ஈஸ்டர் காலகட்டத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டம் வைத்திருந்த ஏஞ்சலா, பின்னர் தான் தவறு செய்துவிட்டதாகவும், அது தன்னுடைய தவறு மட்டுமே என்றும் கூறி ஜேர்மன் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.

அதை விமர்சிக்கும் வகையில், பெர்லினிலுள்ள அரசியல் உலகம் இன்று முதல் ஏஞ்சலா நிச்சயமாக ஒரு lame duck என்ற முடிவுக்கு வந்துவிடும் என்று கூறிய Bela, அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்காக வருந்துகிறேன் என்றார்.

ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதை அமுல்படுத்தாமல் பின்வாங்குவதிலிருந்தே, இன்று முதல் ஏஞ்சலாவின் பலம் குறையத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் Bela.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்