பூசணிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா?

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது பெரும்பாலும் பங்கு வகிக்கின்றது.

பூசணிக்காயை தினமும் சமைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும், சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும்.

அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.

பூசணிக்காயின் விதைகளில் உள்ள ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் ஆகியவைகள் புற்றுநோய் கட்டிகளைத் தாக்க வல்லது, செல் இறப்பிலிருந்து பாதுகாக்கும்.

பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால் இது அதிக ரத்த அழுத்தத்தையும், அதனால் ஏற்படக் கூடிய இதயக் கோளாறுகளையும் தடுக்க வல்லது. பூசணிக்காயில் துத்தநாகம் சத்து மிகுதியாக உள்ளது.

பூசணிக்காயை நாம் தினமும் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • இதயம் பலவீனமாக இருப்பவர்கள் வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரணடி தேன் சேர்த்து சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.
  • பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
  • பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
  • வாரத்துக்கு இரு முறை பூசணிக்காய் சாறு அல்லது பயத்தம்பருப்பு போட்டு பூசணிக்காய் சாலட் செய்து உண்பது ந‌ல்ல‌து.
  • தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும்.
  • பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்