மலம் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா? காரணம் என்ன தெரியுமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்

நமக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் இந்த மலவாய் பகுதியில் ஏற்படும் பிளவுகள், இரத்தக் கசிவுகள் போன்றவை வலியை ஏற்படுத்துகின்றது.

இதனால் சிலருக்கு மலம் கழிக்கும் போது தீவிர எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும்.

அந்தவகையில் இது போன்ற பிரச்சினைக்கு என்ன காரணம்? தீர்வு என்ன? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

காரணங்கள்
 • மலவாய் பகுதியில் உள்ள இரத்த குழாய் வீக்கமடைந்து அதன் சுவரை தொட்டுக் கொண்டு இருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது இரத்தக் கசிவு, எரிச்சல், அரிப்பு, வலி மற்றும் அழற்சி ஏற்படும்.
 • மலவாய் பகுதியை சுத்தம் இல்லாமல் வைக்கும் போது அந்த பகுதியில் எரிச்சல், இரத்தக் கசிவு ஏற்படலாம்.
 • கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அந்த மாதிரியான சமயங்களில் மலவாய் பகுதியில் எரிச்சல் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகு இந்த எரிச்சல் தானாகவே சரியாகி விடும்.
 • வயிற்று போக்கு, மலச்சிக்கல் போன்றவை, அடிக்கடி மலவாய் பகுதியை துடைப்பது போன்ற பிரச்சினைகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
 • மலம் கழிக்கும் போது அதிக அழுத்தத்தை கொடுப்பதும் மலவாய் பகுதியில் பிளவு ஏற்பட்டு எரிச்சலை ஏற்படுத்தும்.
 • காரசாரமான கொழுப்பு உணவுகளை சாப்பிடும் போது மலவாய் பகுதியில் எரிச்சல், சீரணமின்மை, அசெளகரியம், வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும். மேலும் கொழுப்பு அதிகமான உணவுகள் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
 • இரத்தக் கசிவு கூட மலவாய் பகுதியில் ஏற்படும் பிளவு, குடல் புற்று நோய் போன்றவையாக இருக்கலாம்.
எப்படி சரி செய்வது
 • மலவாய் பகுதியில் எரிச்சல் இருப்பவர்கள் மாங்காய் விதைகளை உலர வைத்து பொடியாக்கி கொள்ளுங்கள். 2 கிராம் இந்த பவுடருடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிட்டு வரலாம்.
 • சில கொத்தமல்லி விதைகளை இரவில் தூங்குவதற்கு முன் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் அதை சாப்பிடுங்கள். மலவாயில் ஏற்படும் எரிச்சல், இரத்தக் கசிவு போன்றவை சரியாகி விடும்.
 • வாழைப்பழத்தை நன்றாக பால் விட்டு பிசைந்து மலவாய் பகுதியில் போட்டு வந்தால் எரிச்சல் குறைந்து விடும்.
 • 1 ஸ்பூன் க்ரான் பெர்ரியை அரைத்து அதை ஒரு சீஸ்துணியினுள் வைக்க வேண்டும். மலவாய் பகுதியில் வீக்கம் இருக்கிறதோ அவர்கள் அதை அங்கே வைக்க வேண்டும்.
 • 4 அத்தி பழங்களை எடுத்து இரவில் ஊற வைத்து கொள்ளுங்கள். காலையில் அதை சாப்பிடுங்கள். இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது இன்னும் நல்லது.
 • சீரக பொடியை தண்ணீர் விட்டு கெட்டிப் பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை மலவாய் பகுதியில் அப்ளே செய்யுங்கள். இது உடனே குளிர்ச்சியை தந்து எரிச்சலை போக்கி விடும்.
 • தயிர் மற்றும் பட்டர் மில்க் இரண்டையும் சேர்த்து கொண்டால் சீக்கிரம் மலவாய் எரிச்சல் போய்விடும்.
 • மலவாய் பகுதியில் எரிச்சல் இருப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸ் மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வரலாம்.
 • கொத்தமல்லி ஜூஸூடன் 5 கிராம் சர்க்கரை சேர்த்து ஒரு நாளைக்கு 2 தடவை என குடித்து வரலாம்.
 • வெதுவெதுப்பான நீரை டப்பில் நிரப்பி உட்கார்ந்து இருக்கலாம். வீக்கம் இருக்கும் இடத்தில் இந்த மாதிரி வைக்கும் போது இரத்த ஓட்டம் அதிகமாகி மலவாய் வீக்கம் குறைந்து விடும்.
 • முள்ளங்கியை துருவியோ அல்லது சாறு எடுத்தோ உப்பு சேர்த்து பயன்படுத்தலாம்.
 • கற்றாழை ஜெல்லை இதை எரிச்சல் இருக்கும் மலவாய் பகுதியில் அப்ளே செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை

காரசாரமான உணவுகளை தவிருங்கள், டீ, காபி மற்றும் சர்க்கரை போன்றவற்றை தவிருங்கள். இப்படி தவிர்ப்பது மலச்சிக்கல் எரிச்சலை ஓரளவு போக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்