பெண்கள் பூப்பெய்தியதும் கொடுக்கப்படும் சித்த மருத்துவ உணவு முறை

Report Print Nalini in ஆரோக்கியம்

தமிழகத்தில் பன்னெடுங்காலமாகப் பெண்கள் பூப்பெய்திய பின் பிரத்யேகமான ஆரோக்கிய உணவு வகைகளைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆரோக்கியப் பழக்கம் தற்போது மறைந்துபோய், பெண் பூப்பெய்திய அன்றைக்கு மட்டும் கொடுக்கும் சடங்காகச் சுருங்கிவிட்டன.

பூப்பு கால உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் மலட்டுத்தன்மை நீங்கும்; சினைப்பை கட்டிகள் உருவாவது தடுக்கும்.

கருப்பைக் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; கருப்பை நீக்கம் தேவைப்படாது என்பதே இந்தச் சித்த மருத்துவ உணவு முறையின் சிறப்பம்சம்.

மாதவிடாய் கால 1வது நாள் முதல் 5-வது நாள்வரை: எள்ளு உருண்டை
  • வெள்ளை எள் – ஒரு கப்,
  • சர்க்கரை முக்கால் கப்,
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு
  • வெள்ளை எள்ளைப் பழுப்பு நிறமாக மாறும்வரை வறுத்து, மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டையாக்கிக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் ஏற்பட்ட ஆறு நாட்கள் முதல் 14 நாட்கள்வரை: உளுந்தங்களி
  • சம்பா அரிசி- ஒரு பங்கு,
  • முழு உளுந்து – கால் பங்கு,
  • ஏலக்காய் பொடி – சிறிதளவு,
  • கரும்பு வெல்லம் – தேவையான அளவு
  • சம்பா அரிசி, முழு உளுந்து ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடியாக்கவும். கரும்பு வெல்லத்தில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஏலக்காய் பொடி, அரைத்த அரிசி, உளுந்தைக் கலந்து நல்லெண்ணெய் சேர்த்துக் களிப்பதம் வரும்வரை கிளறி இறக்க வேண்டும்.
மாதவிடாய் ஏற்பட்ட 15-வது நாட்கள் முதல் 28-வது நாட்கள்வரை: வெந்தயக் கஞ்சி
  • வெந்தயம் -ஒரு பங்கு,
  • சம்பா அரிசி – நான்கு பங்கு
  • சம்பா அரிசி மற்றும் வெந்தயத்தை இளம் சிவப்பாக வறுத்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்