இந்த எண்ணெய் மட்டும் தேய்த்து பாருங்க! உங்க தலை முடி எப்படி வளர்துன்னு பார்ப்பீங்க!

Report Print Nalini in ஆரோக்கியம்

கறிவேம்பு அல்லது கருவேப்பிலை என்று அழைக்கப்படும் இது பல மருத்துவ குணங்கள் கொண்ட தாவரம் ஆகும்.

இது நமது உடலுக்கும் அழகுக்கும் மிகவும் நல்லது. அதனால் தான் நமது முன்னோர்கள் இதன் சிறப்பை நன்றாக தெரிந்து வைத்திருந்தனர்.

இப்போது இருக்கும் இளைய தலைமுறை கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுவது, கெமிக்கல் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவது, போதுமான அளவு தூங்காமல் விழித்திருப்பது போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து முதிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது. இது அவர்களது மன தைரியத்தை குறைக்கிறது.

கறிவேப்பிலை எண்ணெய் உங்கள் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இது ஒரு ஊட்டச்சத்து டானிக் மாதிரி செயல்பட்டு உங்கள் கூந்தலுக்கு தேவையான போஷாக்கை தருகிறது.

கறிவேப்பிலை எண்ணெய் மற்றும் இதை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்படும், பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் வராது.

கறிவேப்பிலை எண்ணெய்யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது தலையை ஈரப்பதத்துடன் வைப்பதோடு, இறந்த மயிர்கால்களை நீக்கி புத்துயிர் கொடுக்கிறது.

கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்க்கும் போது நல்ல கன்டிஷனராக செயல்படுகிறது.

பித்தத்தை தனித்து உடல் சூட்டை ஆற்றும் தன்மை உடையது. அதோடு கருவேப்பிலை கீரை மனதுக்கு உற்சாகத்தை தரக்கூடியது.

குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவற்றை கருவேப்பிலை குணப்படுத்துகிறது. பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தை குணப்படுத்த கருவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலை எண்ணெய் தயாரிக்கும் முறைகள்

  • இதற்கு 1/2 லிட்டர் அளவு தேங்காய் எண்ணெய் பச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கருவேப்பிலையை, தண்ணீரில் போட்டு கழுவி நிழலில் காய வைக்க வேண்டும்.
  • கருவறையில் இருக்கும் தண்ணீர் நன்றாக உளர விட வேண்டும்.
  • கருவேப்பிலை பச்சை நிறத்திலேயே தான் இருக்கணும்.
  • பச்சை நிறத்திலேயே இருக்கும் அந்த கருவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • தண்ணீர் ஊற்றக் கூடாது. அப்படியே பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பொடியாக்கிய கருவேப்பிலையானது, 1/2 கப் எடுத்து கொள்ள வேண்டும்.
  • தயாராக எடுத்து வைத்திருக்கும் எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி, அந்த எண்ணெயோடு, அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை பொடியையும் சேர்த்து, இதோடு ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை பொடிசெய்து சேர்த்து, அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
  • கருவேப்பிலை, அந்த எண்ணெயில், நன்றாக வெந்து, கருவேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும், தேங்காய் எண்ணெயில் இறங்கும்.
  • எண்ணையை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கொதிக்க வைத்தால் போதும். பின்னர் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி தினமும் தலையில் தேய்த்து வந்தால் இளநரை, தலை அரிப்பு, பொடுகு தொல்லை அடங்கும். முடி அடர்த்தியாக வளர ஆரம்பித்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்