மனிதன் உடலுக்கு ஆரோக்கியம் தருவது தயிரா? மோரா? அலசுவோம்

Report Print Nalini in ஆரோக்கியம்

தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவி செய்கிறது.

மோருடன் இஞ்சி, பெருங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கலந்து குடித்து வரலாம். சாதமாகச் சாப்பிடும்போது தயிரைப் பயன்படுத்தலாம் தவறு கிடையாது.

மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும்.

கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும்.

ஆனால் தயிர் உடலுக்குச் சூட்டைத்தான் கொடுக்கும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும்.

மோரினால் கிட்டும் நன்மைகள்:

  • தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
  • உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
  • பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
  • மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
  • வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
  • மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
  • வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
  • நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
  • நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
  • பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

குறிப்பு

கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்