அயர்லாந்து நாளிதழில் முதல்பக்க செய்தியான அதிமுக தேர்தல் அறிக்கை!

Report Print Basu in இந்தியா
அயர்லாந்து நாளிதழில் முதல்பக்க செய்தியான அதிமுக தேர்தல் அறிக்கை!
640Shares
640Shares
lankasrimarket.com

அதிமுக தேர்தல் அறிக்கையை குறித்து அயர்லாந்து நாளிதழிலான The Irish Times முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக தேர்தல் களத்தில், இம்முறை சில பிரதான கட்சிகள் இலவச அறிவிப்புகளை தவிர்த்தாலும், ஆளும் அதிமுக கட்சி இலவசங்களை தவிர்க்கவில்லை.

இதுகுறித்து The Irish Times என்னும் அயர்லாந்து நாளிதழில் வெளியான செய்தி:

அதிமுக-வின் தேர்தல்அறிக்கை, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தாய் என குறிப்பிட்டுள்ளது. இதுபோன்று, இலவசங்களை வாரி இறைக்கும் கட்சியை அயர்லாந்தில் பார்க்க முடியுமா? என்றும் அப்பத்திரிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

இலவச செல்போன்கள், தாலிக்கு எட்டு கிராம் தங்கம் இலவசம், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் என பல்வேறு அறிவிப்புகள் அதிமுக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அப்பத்திரிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக பல்வேறு அறிவிப்புகளை அதிமுக வெளியிட்டுள்ளதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments