எம்ஜிஆர் மருமகன் கொலை வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Fathima Fathima in இந்தியா
எம்ஜிஆர் மருமகன் கொலை வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
625Shares

எம்ஜிஆர் மருமகனின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன்.

இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.

இதுகுறித்து கோட்டூர்புரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கருணா என்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கருணா, பானு, கூலிப்படையை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 7ம் திகதி உத்தரவிட்டார்.

இதன்படி இன்று தீர்ப்பினை வாசித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments