12ம் வகுப்பு தேர்வில் 1,167 மதிப்பெண்கள்: மாணவனின் மருத்துவர் கனவுக்கு தடையான வறுமை

Report Print Basu in இந்தியா
12ம் வகுப்பு தேர்வில் 1,167 மதிப்பெண்கள்: மாணவனின் மருத்துவர் கனவுக்கு தடையான வறுமை

12ம் வகுப்பு தேர்வில் 1,167 மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவர் மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள சம்வம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது எம்.ஜி.ஆர் நகர். இப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆனந்தனின் மகன் சக்திவேல் 12ம் வகுப்பு தேர்வில் 1,167 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தும் பணம் இல்லாததால் தன்னுடைய எதிர்காலம் கேள்விகுள்ளாகியிருப்பதாக மாணவர் சக்திவேல் தெரிவிக்கின்றார்.

சக்திவேலின் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு இல்லாததால், தமிழக அரசு வழங்கிய இடத்தில் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக அவரது தாயார் லட்சுமி தையல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாணவர் சக்திவேலுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தந்தாலும் தங்களின் வறுமையால் சக்திவேலை படிக்க வைக்க முடியாத நிலையில் இருப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பள்ளி ஆசிரியர்களின் உதவியால நல்ல முறையில் படித்து 12ம் வகுப்பு தேர்வில் 1,167 மதிப்பெண் பெற்றாலும், மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பிக்க கூட பணம் இல்லாமல் மாணவர் சக்திவேல் வேதனை அடைந்துள்ளார்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் மாணவர் சக்திவேல் இருப்பதை கண்டு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments