நடிகர் விஜய்யின் ஆதரவு இந்த கட்சிக்கா? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழக இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இயங்கும் மக்கள் இயக்கம் திமுக-வுக்கு அதரவு அளிக்க உள்ளதாக தெரிகிறது.

கடந்த மே மாதம் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த இரு தொகுதிகள் உட்பட திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து வருகிற 19ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆதரவு ரகசியமானதாக இருக்கும் என்றும், அந்தந்த தொகுதி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும்படி மக்கள் இயக்க மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments