பணம் இல்லை என்று சொன்ன வங்கி ஊழியர்கள்: வெளுத்து வாங்கிய பிரபல நடிகை!

Report Print Santhan in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்னர் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தபால்நிலையங்கள் மற்றும் வங்கிகளில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக மக்கள் அனைவரும் வங்கிகள் மற்றும் தபால்நிலையங்களில் வெகுநேரம் காத்திருந்து பணங்களை பெற்றுச் செல்கின்றன.

இந்நிலையில் பிரபல நடிகையும், YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி மாவட்டத்தின் எம்எல்ஏவுமான ரோஜா அப்பகுதியில் உள்ள சித்தூர் வங்கி கிளைக்கு தன்னுடைய பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அங்கு வங்கி ஊழியர்கள் திடீரென்று பணம் இல்லை என்றும் கூறி No Exchange பலகையை வைத்துள்ளனர். இதை அறிந்த ரோஜா அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் இது குறித்து கூறுகையில், இது ஒரு நல்ல திட்டம் தான் என்றும் ஆனால் இதில் எந்த ஒரு பணக்காரர்களும் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை என்றும் ஏழைமக்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments