ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்: தொண்டர்கள் உற்சாகம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவசர பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 58 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் பூரண குணமடைந்துள்ளார்.

அவரின் உடலில் ஏற்பட்ட முக்கிய பிரச்னைகள் அனைத்தும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையின் அவசர பிரிவில் இருந்து இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் தொண்டர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments