சாக மறுத்த மகளை முந்தானையில் முடிந்த தாய்! துடிதுடிக்க பலியான பிஞ்சுகள்- காரணம் என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் மேல்மருவத்தூர் அடுத்த அகிலி கிராமத்தை சேர்ந்த தம்பதி தாமோதரன்- மங்கலட்சுமி.

இவர்களுக்கு சுஜிதா(வயது 4), தாரிணி, தாட்சாயிணி(வயது 2) மூன்று மகள்கள் உள்ளனர்.

வேலைக்காக தினமும் தாமோதரன் சென்னைக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது, இதனால் வேலைக்கு செல்லாமலும், வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்துள்ளார்.

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரவே தாமோதரன்- மங்கலட்சுமிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவதினத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார், இவரை மங்கலட்சுமி கண்டித்துள்ளார்.

இதனால் சோகத்தில் இருந்த மங்கலட்சுமி நேற்று தன்னுடைய மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பாலடைந்த கிணற்றுக்கு சென்றுள்ளார்.

அங்கே மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விபரம் தெரியவர விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் மூத்த மகள் சுஜிதாவை மங்கலட்சுமி முந்தானையில் முடிந்து வைத்துள்ளார்.

முதலில் இரு பச்சிளம் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டவுடன், சுஜிதா குதிக்க மறுத்துள்ளார்.

இதனால் மகளை தன்னுடைய முந்தானையில் முடிந்து வைத்து தற்கொலை செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து தாமோதரனிடம் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் மொத்த குடும்பமே இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments