ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த செவிலியர் தற்கொலை முயற்சி: காரணம் என்ன?

Report Print Basu in இந்தியா

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த செவிலியர் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை ஊழியரான க்ளோரியாவே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முன்னதாக, அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைந்தால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த செவிலியர் க்ளோரியா தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற க்ளோரியா, தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும், கடந்த மாதம் க்ளோரியாவின் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்பது நினைவுக் கூறதக்கது.

இந்நிலையில், செவிலியர் க்ளோரியா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் பணியாற்றியவர் அல்ல என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments