இன்றைய வானிலை எப்படி? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், இன்று மிதமானது முதல் கனமான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், சில வேளைகளில் மட்டும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால், சிதம்பரம், புதுச்சேரி மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் இன்று மிதமான மழைப் பொழிவு இருக்கும்.

மேலும் கரைகளில் மழை மேகங்கள் அடுக்கடுக்காக காணப்படுவதால் நேற்றை போல இல்லாமல் இன்று பகலில் நல்ல மழைப் பொழிவு இருக்கும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...