நடிகரும், கமல்ஹாசனின் அண்ணனுமான சாருஹாசன் தமிழக அரசியல் குறித்து வெளிப்படையாக கருத்து கூறிவருபவர்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் ஜெயிக்க முடியாது என சமீபத்தில் கருத்து கூறியிருந்தார்.
இந்நிலையில் கமலை பார்த்து, "ஏன் அரசியலுக்கு வருகிறாய்” என்று கேட்பவர்கள், ரஜினியைப் பார்த்து, ''நீங்கள் ஏன் இன்னும் அரசியலுக்குள் தீர்க்கமாக நுழையவில்லை'' என்று கேள்வி கேட்காமல் இருப்பதிலேயே மக்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது.
கமலின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், அவரின் சுபாவத்துக்கு தனிக்கட்சி, தமிழக அரசியல் சரிப்பட்டு வருமா என்பது குறித்து கருத்து தெரிவித்துள் அவர், அரசியலில் வெற்றிபெற ஒரு பொய்யான தெய்வ வழிபாடு தேவை. அந்த வழிபாடு இல்லாதது கமலுக்குப் பெரும் குறை.
திரைப்படத் துறையில் நடித்துவரும் நடிகர்கள் ரகசியமாக கற்பை இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்தச் சமூகம் ஆராதித்து ஏற்றுக்கொள்கிறது.
நிஜமான வாழ்க்கையில் வெளிப்படையாகக் கற்பை இழந்து வாழும் ஆண்களை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்.