ஆண்பிள்ளை பிறக்காததால் பெண் செய்த கொடூர வேலை

Report Print Kabilan in இந்தியா

உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர், தனது பெண் குழந்தையை கொன்று, Wachine machine-யில் அடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் தனது மூன்று மாத பெண் குழந்தையை யாரோ கடத்திவிட்டனர் என பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர் மீது சந்தேகமடைந்த பொலிஸார், ஆர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷ் டோமர் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவரின் விருப்பம் ஆண் குழந்தையாக இருந்ததால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்.

மேலும், அந்த குழந்தையின் மீது ஏற்பட்ட கோபத்தினால், தலையணை மூலமாக குழந்தையைக் கொலை செய்துள்ளார். பின்னர், Washing machine-யில் குழந்தையின் உடலை அடைத்துள்ளார்.

தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, எங்களிடம் குழந்தையை யாரோ கடத்திவிட்டதாக புகார் அளித்தார். ஆனால், நாங்கள் நடத்திய தீவிர விசாரணையில் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், பெண்ணின் குடும்பத்தார் எவரும் ஆண் குழந்தை வேண்டும் என ஆர்த்தியை வற்புறுத்தவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது’ என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்