எனக்கு எதிரி இதுதான், ஐபிஎல் போட்டியில் இதை செய்திடுங்கள்: ரஜினி பரபரப்பு பேச்சு

Report Print Fathima Fathima in இந்தியா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தமிழகத்தில் கடும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்று நடிகர் சங்கம் சார்பிலும் மௌன போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

பஞ்ச பூதங்களில் ஒன்று கெட்டுப்போனாலும் உலகம் அழிந்துவிடும், எனவே பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை.

தற்போதைய சூழலில் ஐபிஎல் போட்டி தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணி கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும், போட்டியை பார்க்க செல்லும் நபர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, லஞ்சம், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர் தான் எனக்கு எதிரி.

காவிரிக்காக போராடும் சூழலில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்