சொர்க்கத்திலிருந்து பார்ப்பான்: இருவர் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுவன் குறித்து வேதனை

Report Print Raju Raju in இந்தியா
166Shares
166Shares
lankasrimarket.com

கேரளாவை சேர்ந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கிய இருவரின் உயிரை காப்பாற்றிவிட்டு தன்னுடைய உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (14). இவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் அங்குள்ள கடற்கரை ஓரத்தில் தனது சகோதரர் பஹத் (13) மற்றும் அவர் நண்பருடன் சேர்ந்து கால்பந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது பந்து கடல் உள்ளே சென்ற நிலையில் பஹத் அதை எடுக்க சென்றுள்ளார்.

இதையடுத்து நீரில் மூழ்க தொடங்கிய பஹத்தை காப்பாற்ற அவர் நண்பர் சென்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரோஸ் வேகமாக தண்ணீரில் இறங்கி பஹத்தையும், அவர் நண்பரையும் காப்பாற்றினார், ஆனால் துரதிஷ்டவசமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதையடுத்து சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சிலர் பிரோஸை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பேசிய பிரோஸின் தம்பி பஹத், என்னை காப்பாற்ற முயன்று அவன் உயிரிழந்துவிட்டான்.

மீண்டும் அவன் என்னிடம் வரவேண்டும் அல்லா என சோகத்துடன் கூறியுள்ளார்.

இதனிடையில் மிகபெரிய கால்பந்து ரசிகரான பிரோஸ் அவனுக்கு பிடித்த பிரான்ஸ் அணி விளையாடிய அரையிறுதி போட்டியை சொர்க்கத்திலிருந்து பார்த்திருப்பான் என நபர் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்