ஓசி பிரியாணி திமுக: தேசிய அளவில் கப்பல் ஏறிய மானம்.. சாமர்த்தியமாக கரை சேர்த்த ஸ்டாலின்!

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஓசியில் பிரியாணி கேட்டு, தொடர்கள் நடத்திய தாக்குதலால் ஒரே நாளில் தேசிய அளவில் கப்பல் ஏறிய திமுகவின் மனத்தை சாமர்த்தியமாக செயல்பட்டு செயல்தலைவர் ஸ்டாலின் சரி செய்துள்ளார்.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோகமான சூழ்நிலையில், கடந்த 29-ம் தேதியன்று திமுகவை சேர்ந்த தொண்டர்கள் சிலர், வளசரவாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஓசியில் பிரியாணி கேட்டு ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்ததும், சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி செயல்தலைவர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால் நெட்டிசன்கள் சிலர் "ஓசி பிரியாணி திமுக" என்ற ஹாஸ்டேக் ஒன்றினை பயன்படுத்தி தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கினர். இதனால் திமுகவின் மானம் ஒரேநாளில் உச்சத்திற்கு சென்றதை பார்த்த ஸ்டாலின் சுதாரித்துக் கொண்டு, உணவக ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் உடல்நிலை சரியில்லாமல் உள்ள நிலையில், கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை சாமர்த்தியமாக செயல்பட்டு செயல்தலைவர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளது குறித்து பலரும் பார்த்து பாராட்ட ஆரம்பித்துளள்னர்.

முன்னதாக பிரியாணி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய, சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக்(22), மணிகண்டன்(23) கிஷோர் (எ) குட்டி கிஷோர்(19), ராம்ஷோர் (எ) பெரிய கிஷோர்(23), சுரேஷ், (எ) சிலுவை சுரேஷ்(19), சதிஷ்குமார் (எ) சதிஷ்(23), ஆகிய 6 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

அதேசமயம் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகள் யுவராஜ், திவாகர் ஆகியோரை பொலிஸார் தீவிரமாக வலைவீசி தேடு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்