திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு அமெரிக்க தூதரகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக இன்று மலை 6.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் இச்சம்பவம் தொடர்பாக, இந்திய பிரதமர் துவங்கி, கடைக்கோடி தொண்டன் வரை பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் அமெரிக்க தூதரகம் சார்பில் Ken Juster தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழக மக்களுக்கும், முத்துவேல் கருணாநிதி குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
On behalf of the United States Mission in India, I wish to extend our heartfelt condolences to the family of former Chief Minister Muthuvel #Karunanidhi and the people of Tamil Nadu. He will be remembered for his years of public service to his state and the country at large.
— Ken Juster (@USAmbIndia) August 7, 2018