இரண்டு கால்களும் ஒட்டி வாலுடன் பிறந்த அதிசய குழந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலத்தில் இரண்டு கால்களும் ஒட்டிய நிலையில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்தில் இறந்துள்ளது.

மூர்த்தி என்பவரின் மனைவி சின்னம்மாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னம்மாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அதிசய குழந்தையாக பிறந்தது.

அதாவது அந்த குழந்தை 2 கால்களும் ஒட்டிய நிலையில், முதுகின் பின்னால் வாலுடன் பிறந்தது.

மேலும் பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்று தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி போயினர்.

இந்த நிலையில் பிறந்த ஒரு மணி நேரத்தில் திடீரென அந்த குழந்தை இறந்து போனது.

இதனால் டாக்டர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர் குழந்தையின் உடல் மூர்த்தியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers