வைரமுத்து நீங்க நிரபராதின்னு நிரூபிச்சு காமிங்க! டிவி MD என்ன வேறொரு ஆபிசுக்கு கூப்பிட்டான்: வேதனையுடன் அப்சரா

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட பாடகியான சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து Me To என்ற ஹேஷ் டேக் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதில் பல பெண்கள் தாங்கள் சாந்தித்த பாலியல் துன்புறுத்தல்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநங்கையான அப்சரா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிரபல டிவியின் MD தன்னை வேறொரு அலுவலகத்திற்கு வருகிறாயா என்று அழைத்ததாக வேதனையுடன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சின்மயி வைரமுத்து மீது வைத்துள்ள குற்றச்சாட்டை வைத்துள்ளார். இவர் மட்டுமின்றி இதே வைரமுத்து சார் மீது பலர் அவருடைய இன்பாக்சிற்கு அனுப்பியுள்ளனர்.

இது எல்லாம் அப்படியே இருக்கிறது. ஒரு பெண் அவருடைய ஹாஸ்டலை விட்டே வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார். இது உண்மையா? தவறா என்பது நமக்கு தெரியாது.

அவர் நிஜமாகவே தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றால், சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் தவறு செய்திருக்கிறாரா? இல்லையா என்பதை அறிய ஒரு கமிட்டி நிர்வகிக்க வேண்டும், விசாரணை நடத்த வேண்டும்.

நான் வைரமுத்து சாரை கெட்டவர் என்று கூறவில்லை. அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்துவிட்டு போகட்டும், ஆனால் நீங்கள் இப்படி ஒரு குற்றம் செய்திருக்கீங்க என்ற போது, அதை அவர் நிரூபிக்க வேண்டும், நிரபராதி என்பதை நிரூபிச்சு காமிங்களே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இப்போது இருக்கும் உலகில் பெண்கள் பலர் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கூட, ஒரு பிரபல டிவியின் MD என் தந்தை வயதுடைய நபர் எனக்கு வேறொரு ஒரு அலுவலகம் இருக்கிறது அங்கு வருகிறாயா என்று கேட்டார்.

அவருடைய பேச்சில் ஒரு ஆபாசம், கவர்ச்சி போன்றவை இருந்தது. Me To என்பது பெண்களுக்கு பாதுகாப்பான ஒன்று தான் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்