கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு அக்கா- தம்பி எடுத்த அதிரடி முடிவு

Report Print Vijay Amburore in இந்தியா

குஜராத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபரின் மகளும், மகனும் துறவறம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சூரத்தின் ஆதினா பகுதியில் அமைந்திருக்கும் இஷிதா சொசைட்டி மிகவும் பிரபலமான ஒன்று. அதன் உரிமையாளரான ஜவுளி தொழிலதிபர் பாரத் வோரா (57) ஏராளமான கடைகளை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு 22 வயதில் ஆயுஷி என்ற மகளும், 20 வயதில் யாஷ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் எப்பொழுது வெளியில் சென்றாலும் காரில் தான் செல்வார்கள். ஒருமுறை கூட காலனி இல்லமால் வெளியில் சென்றதில்லை.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசுகளாக கருதப்பட்டு வந்த நிலையில், அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருவரும் துறவறம் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தாலும் அவர்களின் தந்தை பாரத், தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எங்களுடைய பூர்வ கிராமத்தில் சொந்த பங்களாவுடன் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அங்கு 15 வீடுகள் சொந்தமாக உள்ளன. எங்களுடைய ஊரில் எல்லோருடைய வீட்டிலும் ஒரு துறவி உள்ளார். அந்த வகையில் தற்போது என்னுடைய வீட்டிலிருந்து இரண்டு பேர் துறவறம் ஏற்பது எனக்கு மகிழ்ச்சியே என கூறியுள்ளார்.

ஆயுஷி இதுபற்றி பேசுகையில், என்னுடைய தாயார் என்னை திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணாக பார்க்காமல், துறவியாக பார்க்க விரும்பினார். அவரின் ஆசைப்படி நான் துறவறத்தை பற்றி கற்றுக்கொள்ள ஆர்ம்பித்தேன். வரும் நவம்பர் 9ம் தேதி துறவறம் மேற்கொள்ள உள்ளேன் என கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய யாஷ், நான் கல்லூரி படிப்பினை முடித்ததும், என்னுடைய தந்தையுடன் கடைக்கு சென்று ஜவுளி தொடர்பனா வேலைகளை பார்த்து வந்தேன். ஆனால் அது எனக்கு ஒத்து வருவதை போல் தெரியவில்லை. அப்பொழுது தான் என்னுடைய சகோதரி துறவறம் பற்றி பேசினார். அதன் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் தான் நானும் துறவறம் செல்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers