இனி அவளுக்கு வலிக்காது... மனைவி உயிரை காப்பாற்றிய கணவன்! நெகிழ்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா. இவர் மனைவி ஆஷா. ஆஷாவுக்கு சில காலமாக சிறுநீரகம் செயலிழந்த நிலையில் டயாலிஸிஸ் சிகிச்சை செய்து வந்தார்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள்.

உடனடியாக ஆஷாவுக்கு சிறுநீரகம் கிடைக்காத நிலையில் அவரது கணவர் ராகேஷ் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து ஆஷாவுக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார்.

இது குறித்து ராகேஷ் கூறுகையில், சிறுநீரக நோயால் என் மனைவி பெரிதும் அவதிப்பட்டு வந்தார். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் வேலையை அவரே நிம்மதியாக செய்ய முடியும்.

அவருக்கு இனி வலியாவது இல்லாமல் இருக்கும். கடந்த 30 வருடங்களாக என் உடல் நலத்துக்காக ஆஷா கடவுளை வேண்டினார்.

இப்படிப்பட்ட மனைவிக்கு என் சிறுநீரகத்தை பரிசாக கொடுப்பது என் கடமை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers