பற்றியெரியும் சர்கார் பிரச்சனை: விளக்கமளித்த இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்

Report Print Raju Raju in இந்தியா

சர்கார் திரைப்படத்தில் அரசுக்கு எதிரான விடயங்கள் இல்லை என படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து சர்கார் ஓடும் திரையரங்குகளில் அதிமுக-வினர் போராட்டம் நடத்தினார்கள்.

இது சம்மந்தமாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை 27-ஆம் திகதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக ஏ.ஆர் முருகதாஸ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்கார் படத்தை உருவாக்கவில்லை.

தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொன்னது சட்டவிரோதம்.

சர்காரை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers