பூட்டிய வகுப்பறையில் இளம் பெண்ணுடன் தலைமை ஆசிரியரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாகர்கோவில் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளி விடுமுறை நாளின் போது பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்த குற்றத்திற்காக தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் அருகே உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுதாங்கன். இவரது நண்பர் சுப்பு. இவரும் ஆசிரியர்தான்.

விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று, காலையில் தலைமை ஆசிரியர் சுதாங்கன் பள்ளிக்கு காலை 10 மணிக்கே வந்துவிட்டார். அவர் வந்த சிறிது நேரத்தில் அவரது நண்பரும் மற்றொரு பள்ளியின் ஆசிரியருமான சுப்புவும் அங்கு வந்தார்.

அவருடன் இளம்பெண் ஒருவர் தனது மகனுடன் வந்திருந்தார். அந்த சிறுவன் பள்ளி சீருடையில் இருந்தான். இளம் பெண் பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றதும், சுதாங்கன் அறையை மூடிவிட்டார்.

தாயை அறைக்குள் விட்டு வெளியே கதவை பூட்டியதை நேரில் கண்டதும் சிறுவன் அழத்தொடங்கினான். சிறுவனை அழைத்து வந்த ஆசிரியர் சுப்பு, அருகே உள்ள டீக்கடைக்கு அவனை அழைத்து சென்றார்

எதிர்பாராதவிதமாக வரும் வழியிலேயே சிறுவன் அம்மாவை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார்கள் என்று கத்தி ரகளை செய்ய தொடங்கினான்.

இதனால் அந்த பகுதி ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் தாயாரை வைத்து பூட்டியதாக கூறப்படும் இடத்திற்கு அந்த பகுதியினர் விரைந்து சென்றனர்.

பின்னர் சுப்புவை அழைத்து அறையை திறக்க செய்தனர். அறையில் இளம்பெண்ணுடன் தலைமை ஆசிரியர் சுதாங்கன் உல்லாசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளது தெரியவந்தது.

இதை கண்ட அந்த பகுதியினர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

விசாரணை அறிக்கை அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுதாங்கனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நீக்கம் செய்துள்ளார்.

இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்